1.

யாருக்குப் பகைவரால் தீங்கு செய்ய இயலாது?குறுவினாக்கள் திருக்குறள்

Answer»

விடை:



அறிவிற் சிறந்த பெரியோரை சார்ந்து நடக்கும் வல்லவனுக்கு பகைவராலும் எந்த தீங்கு செய்ய இயலாது.



விளக்கம்:



மேலே கூறப்பட்ட விளக்கம் கீழ்க்கண்ட குறளில் காணப்படுகிறது :


தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்.

(குறள் 446: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)



தம்மை நல்வழி நடத்த தக்கவர் என்று அறிந்த பெரியோரை தமக்கு இணக்கமாய் இருக்கத்தக்க இனத்தராகக் கொண்டு, தம்மை அவரோடு இணைந்து இருக்கச் செய்யும் ஆற்றல் உடைய ஆள்வோரை, பகைவர்கள் ஊறு செய்வது என்பது இல்லை.



அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னை சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.




Discussion

No Comment Found