1.

விண்ணியல் குறித்துத் திருவாசகம் உரைப்பது யாது?சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answer»

விடை:


சைவ சமய நூலான திருவாசகம் விண்ணியலைப் பற்றியும் பேசுகிறது. திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில், இன்று அறிவியல் அறிஞர் ஒப்புக் கொண்டுள்ள பேரண்டவியல் பற்றிய கருத்துகள் உள்ளன.



நம் பேரண்டத்தில் பல நூறு அண்டங்களும் அவற்றில் கணக்கற்ற விண்மீன்களும் உள்ளன என்னும் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதை திருவண்டப்பகுதி தெளிவாய் விளக்கியுள்ளது.



விளக்கம்:



பேரண்டத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டேயுள்ளன. மேலைநாட்டு அறிஞர் இது குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளனர். ஆராய்ந்தும் வருகின்றனர். ஆனால், உலகம் உருண்டை என்பதனைப் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகே மேலை நாட்டினர் உறுதி செய்தனர். ஆன்ம இயல் பேசும் திருவாசகம் விண்ணியலையும் பேசுகிறது.




Discussion

No Comment Found