உலகம் நினைத்திருப்பதற்கான காரணங்கள் எவை என இளம்பெரு வழுதி குறிப்பிட்டுள்ளார் ?
Answer»
இளம்பெரு வழுதி:
உலகம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள் எவை என இளம் பெருவழுதி குறிப்பிடும்பொழுது ஆரம்பமாக தனித்து உண்ணாமல் இருப்பது தான் தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை என்று குறிப்பிடுகின்றார்.
எனவே இது உலகம் நிலைத்திருக்கக்கூடிய செயல் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
நம் முன்னோர்கள் உணவு உண்ணும் பொழுது அரசன் முதல் சாதாரண மக்கள் வரை அனைவருமே தான் மட்டும் தனித்து உண்ணாமல் உடன் இருப்போரையும் அழைத்து ஒன்றாக ஒன்றிணைந்து உணவு உண்ணச் செய்வார்.
இரண்டாவதாக குறிப்பிடும்பொழுது அமிழ்தமே கிடைத்தாலும் அதை தான் மட்டுமே உண்ணாமல் பிறருக்கும் கொடுக்கும் அந்த நல்ல மனிதர்களால்தான் உலகம் நிலைத்திருக்கின்றது என்பதாக குறிப்பிடுகின்றார்.
ஆனால் இன்றைய சூழலில் வாழும் மக்கள் பிறருக்குக் கொடுப்பதற்கு மனம் வராத மனிதர்களாகத் தான் இருக்கிறார்கள்.