| 1. |
உலகம் என்னும் தமிழ்ச் சொல் _________ என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது.1உலகு 2உலவு 3உளது உரிய விடையைத் தேர்த்தெழுதுக தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள் |
|
Answer» விடை: உலகம் என்னும் தமிழ்ச் சொல் உலவு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. விளக்கம்: சைவ சமய நூலான திருவாசகம் விண்ணியலைப் பற்றியும் பேசுகிறது. திருவாசகத்தின் திருவண்டப் பகுதியில், இன்று அறிவியல் அறிஞர் ஒப்புக்கொண்டுள்ள பேரண்டவியல் பற்றிய கருத்துகள் உள்ளன. நம் பேரண்டத்தில் பல நூறு அண்டங்களும் அவற்றில் கணக்கற்ற விண்மீன்களும் உள்ளன என்னும் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதை திருவண்டப்பகுதி தெளிவாய் விளக்கியுள்ளது. இதில் உலகம் என்னும் தமிழ்ச் சொல் உலவு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது. உலவு என்பது சுற்றுதல் என்ற பொருளைத் தரும். உலகம் தன்னையும், ஞாயிற்றையும் சுற்றி வருகிறது என்னும் அறிவியல் கருத்து, இதில் வெளிப்படுவதனைக் காணலாம். |
|