Saved Bookmarks
| 1. |
உ_பொருளும் (ரு/று) உ_கு (ல்/ள்) பொருளு_ (ன்/ந்) தன் ஒ_னார் ( ண் / ன் )உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word திருக்குறள் |
|
Answer» விடை: உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார் விளக்கம்: " உறுபொருளும் உல்கு " என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். - குறள் 756 இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருட்கள் ஆகும். வாரிசுதாரர் இல்லாமல் வந்த பொருள் வெளி நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தன் பகைவர் தனக்குக் கட்டும் கப்பம் என்னும் இவை எல்லாம் அரசிற்கு உரிய பொருள்களாம் என்று உரையாசிரிய பெருந்தகைகள் கூறுகின்றனர். |
|