Answer» தமிழ்த் திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு நாடகத் துறையின் பங்களிப்பு:- தொடக்க காலங்களில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் மேடை நாடகங்களையும், நாடக நடிகர்களையும் அடிப்படையாக கொண்டதாக இருந்தது.
- நாடகங்களை கண்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதன் அடிப்படையில் திரைப்படங்களை உருவாக்கினர்.
- வடுவூர் துரைசாமியின் மேனகா, காசி விஸ்வாநாதரின் டப்பாச்சாரி போன்ற நாடகங்கள் சமூ சீர்திருத்தினை வலியுறுத்தும் படங்களாக வெளி வந்தன.
- இதுபோல் பம்மல் சம்மந்தானரின் இழந்த காதல் என்ற நாடகமும், கே. ஆர். ரங்கராஜு எழுதிய ராஜாம்மாள் என்ற நாடகமும் திரைப் படமாக வெளி வந்தன.
- கே.பாலசந்தரின் எதிர்நீச்சல், நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம் போன்ற நாடகங்களும் படங்களாகின. கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர், செக்கு மாடுகள் போன்ற நாடகங்களும் படங்களாகின.
|