1.

திருநாவுக்கரசரின் தமக்கையார் ____________ ஆவார்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks தேவாரம்

Answer»

விடை:



திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்



விளக்கம்:



திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார். இவர் சிறந்த சிவபக்தராக இருந்தார். தனது தம்பி சமணத்தில் சேர்ந்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டு வந்தார்.



இதனால் மருள்நீக்கியாருக்கு (திருநாவுக்கரசரின் இயற்பெயர்) கடுமையான சூலை நோய் ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை. பின்னர் தனது தமக்கை திலகவதியிடம் முறையிட்டார். திலகவதி சிவனிடம் மனம் உருகிப் பாடச் சொன்னார். திருநாவுக்கரசர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடி முறையிட்டதில் நோய் தீர்ந்தது. இதனால் மருள்நீக்கியார் சைவ சமயத்துக்கு மீண்டார். இதன் பின்னர் இவர் திருநாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.




Discussion

No Comment Found