Saved Bookmarks
| 1. |
திருநாவுக்கரசர் காலம் ___________ ஆம் நூற்றாண்டு.1கி.பி 12 2கி.பி 7 3கி.பி 9உரிய விடையைத் தேர்த்தெழுதுக தேவாரம் |
|
Answer» விடை: திருநாவுக்கரசர் காலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு. விளக்கம்: திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவர் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவாமூரில் பிறந்தார். பெற்றோர் புகழனார், மாதினியார் ஆவார். இவர் சமண சமயத்தில் இருந்து தன் சகோதரி திலகவதியின் மூலம் சைவ சமயத்திற்கு மாறினார். சிவபெருமானே இவரை “திருநாவுக்கரசர்” எனப் பெயர் இட்டு அழைத்தார். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் கொள்கையில் நின்று உழவாரப்பணி மேற்கொண்டார். திருமறைக்காட்டில் பதிகம் பாடியே கோயில் கதவை திறக்கச் செய்தார். பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகளின் மகனை உயிர் பெற்று எழச் செய்தார். |
|