1.

திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் _________ என வழங்கப்படுகிறது.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks தேவாரம்

Answer»

விடை:



திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் தேவாரம் என வழங்கப்படுகிறது



விளக்கம்:



தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.



இன்று நம்மிடம் கிடைத்திருப்பது 791 பதிகங்கள். இதில் திருநாவுக்கரசர் 384 பதிகங்கள். தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். இதை ஒட்டியே தேவாரம் எனப் பெயர் பெற்றது என்று சொல்பவரும் உண்டு.




Discussion

No Comment Found