திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலை எழுதியவர்?
Answer»
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்:
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் கால்டுவெல்.
இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலாகும்.
ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம்தான் தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகளின் தாய் மொழியாக இருந்தது என்பதை மக்கள் நம்பியிருந்தனர்.
அச்சூழலில் அதை மறுத்து திராவிட மொழிகளின் பெருமையும் அதன் சிறப்பையும் மகத்துவத்தையும் இந்நூல் எடுத்துரைத்த தோடு தமிழ் தனக்கென தனி மொழி குடும்பத்தை பெற்றிருந்தது என்பதை கூறி தமிழ் மொழிதான் அனைத்திற்கும்"தாய் மொழி" என்றும், தாய்மொழியாக மக்கள் அன்றைய சூழலில் நினைத்து இருந்த அந்த சமஸ்கிருதத்திலும் தமிழ் மொழியின் வார்த்தைகள் உள்ளன என்பதை நிரூபணம் செய்தது இந்நூல்.
இது 1856 ஆம் ஆண்டுவெளியிடப்பட்டது.
இது தமிழுக்காக வெளிநாட்டவர்கள் செய்த தொண்டை பற்றி பேச கூடியதும் கூட.