1.

பின்வரும் கூற்றையும் காரணத்தையும் படித்துப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.கூற்று: ஆங்கிலமொழி, உட்பிணைப்பு நிலையைச் சார்ந்தது.காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும்மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.௮) கூற்று சரி, காரணம் தவறு. ஆ) கூற்று. காரணம் இரண்டும் தவறு.இ) கூற்று தவறு. காரணம் சரி. ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி.

Answer»

கூற்று சரி, காரணம் தவறு.

உட்பிணைப்பு நிலை

  • ஒரு மொ‌ழி‌யி‌ன் அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது இர‌ண்டு‌ம் சிதைந்தும் ஒ‌ன்று‌ப்‌ ப‌ட்டு  நிற்கும். அ‌த்தகைய  அமை‌ப்பு  உட்பிணைப்பு நிலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஐரோ‌‌ப்‌பிய மொ‌ழிக‌ள் உ‌ட்‌பிணைப்பு ‌நிலை‌‌யி‌ல் உ‌ள்ளன. (எ‌.கா) Such, Which ஆ‌‌கிய ஆ‌ங்‌கில சொ‌ற்க‌ள் So-Like, Who-Like ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன் ‌உ‌ட்‌பிணை‌ப்பு ‌நிலை ஆகு‌ம். எனவே கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.

காரணம்: ஆங்கில மொழியில், அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும்.

ஒ‌ட்டு‌நிலை

  • அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமை‌ப்பு ஒ‌ட்டு ‌நிலை என‌ப்படு‌ம். ஆனா‌ல் ஆ‌ங்‌கில‌ மொ‌ழியானது ஒ‌ட்டு  நிலை அமை‌ப்‌பினை பெற‌வி‌ல்லை. எனவே காரண‌ம் தவறு.


Discussion

No Comment Found