| 1. |
பொருளல்லவரைப் பொருளாகச் செய்வது எது?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: ஒரு பொருட்டாய் மதித்ததற்கு உரியர் அல்லாரை ஒரு பொருட்டாய் மதிக்கச் செய்ய வல்லது பொருட் செல்வமேயாகும். விளக்கம்: மேற்கூறிய விளக்கம் கீழ்க்கண்ட குறளில் பின் வருமாறு காணப்படுகிறது: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். - குறள் 751 ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும் பிறர் மதிக்குமாறு செய்வதில் பொருளுக்கு இணையான விஷயம் வேறொன்றும் இல்லை. ஒருவர் எத்தகைய தளத்திலும் (அறிவு, அறம், திறமை) மதிக்கதகாதவராக இருப்பார். ஆனால் அத்தகைய சிலரை இவ்வுலகில் மக்கள் மதிப்பர். அதற்கு காரணம் அவர்களிடம் உள்ள பொருட்செல்வம் காரணமாக இருக்கும். ஆக ஒருவரை மதிக்க செய்யக்கூடிய வல்லமை பொருள் (பணம், நிலம், பொன்) அன்றி வேறு எதுவுமில்லை. ஆதலால் பொருட்செல்வமும் மதிக்கத்தக்கதே. |
|