Saved Bookmarks
| 1. |
பொருளினது சிறப்பாக வள்ளுவர் கூறுவது யாது?சிறுவினாக்கள்திருக்குறள் |
|
Answer» விடை: 1. ஒரு பொருட்டாய் மதித்தற்கு உரியர் அல்லாரை ஒரு பொருட்டாய் மதிக்கச் செய்ய வல்ல பொருளைத் தவிர வேறு சிறந்த பொருள் எதுவும் இல்லை. 2. எல்லா நன்மைகளை உடையவர் ஆயினும் பொருளற்றவரை யாவரும் இகழ்வர்; செல்வரை உலகினர் யாவரும் சிறப்புச் செய்வர். 3. பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் பேசப்படும் அணையா விளக்கு, அதனை உடையவர் நினைத்த இடங்களுக்கு எல்லாம் சென்று பகை என்னும் இருளை அழிக்கும். விளக்கம்: மேலே சொன்ன விளக்கங்களுக்கான குறள்கள் "பொருள் செயல்வகை" என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. |
|