| 1. |
பசுமை குடில் விளைவு என்றால் என்ன? |
|
Answer» ல ஊடகங்களில் தற்பொழுது, "பூமி வெப்பம் அதிகரிக்கிறது", "கால நிலை மாற்றம்", "பனிக்கட்டிகள் உருகுகின்றன" என்பது போன்று தலைப்பிட்டு செய்திகளை படித்து / பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதன் நடுவே, இதில் அரசியல் வேறு உள்ளே புகுந்துவிட்டது. அதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் கேள்விக் குறியாகி உள்ளது. சரி, இந்த இடுக்கை அதைப் பற்றி எல்லாம் பேசப் போவதில்லை. இதில் நான் எடுத்துக் கொண்ட விடயம், பசுமைக் குடில் விளைவு!. இந்த வார்த்தையை பல இடங்களில் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு எளிய தமிழில் விளக்கம் பெறுவது என்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால், இந்த "பசுமைக் குடில் விளைவு" என்றால் என்ன? அதன் விளைவு என்ன?!, என்று இதைப் பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். குளிர் பிரதேசங்களில் (ஊட்டி) சில செடிகளை வளர்க்க ஒரு கண்ணாடி அறையை வைத்து அதில் வளர்ப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது எதற்கு? அதாவது பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடும். இதனால் அந்த செடிகள் பயனற்றுப் போகும். இதை தடுக்கத்தான் இந்த கண்ணாடிக் குடில் |
|