1.

நன்றாகப் ______ ( பசி ) பின்னர் அளவுடன் உன்ன வேண்டும்.வினைப்பகுதியை எச்சமாகுக / change the tense தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answer»

விடை:


நன்றாகப் பசித்த பின்னர் அளவுடன் உண்ண வேண்டும்.



விளக்கம்:



வினையெச்ச வகைகள் வினையெச்சம், காலம் காட்டும் முறையின் அடிப்படையில் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.



வினைப்பகுதி, காலங்காட்டும் இடைநிலை, வினையெச்ச விகுதி ஆகியவற்றை உடையதாய் வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும். காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினையெச்சம் எனப்பட்டது.



காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், ஏதேனும் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டு முடிவது, ‘குறி்ப்பு வினையெச்சம்’ எனப்படும். (எ.கா) வந்து நின்றான் - இறந்தகாலம் காட்டியது.



மேலே சொன்ன " நன்றாகப் பசித்த பின்னர் அளவுடன் உண்ண வேண்டும்." என்ற தொடரில், நன்றாக பசித்த என்னும் சொல் காலங்காட்டும் தெரிநிலை வினையெச்சம் ஆகும்.




Discussion

No Comment Found