Saved Bookmarks
| 1. |
நல்லார் தொடர்பு கைவிடல் எத்தன்மைத்து?குறுவினாக்கள் திருக்குறள் |
|
Answer» விடை: நல்லார் ஒருவரின் நட்பைக் கைவிடுதல், பலரின் பகைமையைத் தேடிக் கொள்வதைக்காட்டிலும் பன் மடங்கு தீமை விளைவிக்கும். விளக்கம்: மேற்கூறிய விளக்கம் கீழ்க்கண்ட குறளில் பின் வருமாறு காணப்படுகிறது: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். - குறள் 760 நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும் என கூறுகிறது. |
|