1.

நெகிழி மாசு என்றால் என்ன? உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் குப்பைகளின் அளவும் அதற்கேற்றால்போல் அதிகரிக்கிறது. நவீன வாழ்க்கைமுறை மக்களை இலகுவாக தூக்கி எறியக்கூடிய பொருள்களான தண்ணீர் மற்றும் குளிர்பான குடுவைகள் ஆகியவற்றை அதிக அளவில் குப்பைகளாக உற்பத்தி செய்கின்றது. இதன்மூலம் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடுத்தப்படுகிறது. நெகிழியில் நச்சுத்தன்மை அதிகமாக இருப்பதால் இதன்மூலம் காற்று, நீர் மற்றும் நிலம் அதிக மாசடைகிறது.அதிக அளவில் நெகிழிக்கழிவுகள் குறிப்பிட்ட இடத்தில் சேர்வது சுற்றுச்சூழலையும் , தாவரங்களையும் , வனவிலங்குகளையும் மற்றும் பொது மக்களையும் அதிக பாதிப்பிற்குள்ளாக்குகிறது. நெகிழியின் பயன்பாடு அதன்நீண்ட நாள் பயன்பாட்டிற்கு வழிவகுத்தாலும், அது எளிதில் மக்குவதில்லை.நெகிழி மாசின் காரணங்கள்நெகிழியினால் ஏற்படும் பிரச்சனைகள் வெறும் குடுவைகளை சுத்தம் செய்து மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதால் மட்டும் தீர்வாகாது. அது சூழ்நிலைக்கு ஏற்ப வடிவெடுக்கிறது.பழமையான குப்பைசேகரிக்கும் கிடங்குநெகிழிகள் எல்லாஇடத்திலும் பரவலாக காணப்படுகிறது. வெறும் தண்ணீர் குடுவைகளும் மற்றும் பால் கொண்டு செல்ல பயன்படும்நெகிழி பைகள் கூட சிறிய அளவில் சூழல் மாறுபாட்டை ஏற்படுத்தக்கூடியவை. குப்பை கிடங்குகள் மற்றும் குப்பைகளால் ஆன நில மூடல்கள் பெரிய அளவில் வனவிலங்குகளுக்கும் , நிலத்திற்கும் மற்றும் நிலத்தடிநீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.அதிக பயன்பாடுநெகிழிகள் சந்தைகளில் மலிவாக கிடைப்பதால் அவைஅதீத அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது. முறையாக அப்புறப்படுத்தாத நெகிழிகள் நிலத்தை மாசுபடுத்துவதும், எறியூட்டப்படும்போது காற்றை மாசுப்படுத்துவதும் நடைமுறை சிரமங்கள்.மீன்பிடி வலைகள்உலகெங்கும் மீனை உணவாக எடுத்துக் கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் மீன்பிடி தொழில் பரவலாக செய்யப்படும் பிரதான தொழில். மேற்படி தொழிலுக்கு நெகிழிகளால் ஆன வலைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. அதிக ஆண்டுகள் அவை உழைத்தாலும் அவைகளின் நச்சுத்தன்மையால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் மற்றும் கடல்சார் சூழலுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.நெகிழிகள் மற்றும் பிற குப்பைகளை அப்புறப்படுத்துதல்நெகிழியின் ஆயுட்காலம் அதிக ஆண்டுகள் என்பதால் அவை மக்குவதற்கு நீண்ட காலம் ஆகிறது. அதனைமண்ணில் புதைத்தாலும் அதன் நச்சுத்தன்மை மாறுவதில்லை. அதேபோல் மறுசூழற்சி செய்தாலும் நச்சுத்தன்மை குறைவதில்லை​

Answer»

நீங்கள் உள்லே வாருங்கள்



Discussion

No Comment Found

Related InterviewSolutions