1.

மருந்தில்லா மருத்துவம் பற்றித் திருவள்ளுவர் கூறுவதென்ன?குறுவினாக்கள் தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answer»

விடை:


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.



விளக்கம்:



" மருந்தென வேண்டாவாம் " என்று தொடங்கும் குறளில், உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை. தேவையில்லை என்று வள்ளுவர் மருந்தில்லா மருத்துவத்திற்கு அரண் சேர்க்கிறார்.



எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய் ஏற்படும்.




Discussion

No Comment Found