1.

மண்ணியல் அறிவு - குறிப்பு எழுதுக.சிறுவினாக்கள்தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள்

Answer»

விடை:



தமிழர், நிறத்தின் அடிப்படையில் செம்மண் எனவும், சுவையின் அடிப்படையில் உவர் நிலம் எனவும், தன்மையின் அடிப்படையில் களர் நிலம் எனவும் நிலத்தினை வகைப்படுத்தி உள்ளனர்.



செம்மண், அதன் பயன் கருதி போற்றினர். குறுந்தொகை இதுபற்றிச் செம்புலப் பெயல்நீர் போல எனக் கூறும். உவர் நிலம் மிகுந்த நீரினைப் பெற்று இருந்தும் பயன் தருவதில்லை. புறநானூறு இது பற்றி ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்’ என்று கூறுகிறது. களர் நிலம் எதற்கும் பயன்படாது. திருக்குறள் இது பற்றிப் பயவாக் களரனையர் கல்லாதவர் என்று இயம்புகிறது.




Discussion

No Comment Found