| 1. |
கூவல்"" என்று அழைக்கப்படுவது எது? |
|
Answer» ூவல் என்று அழைக்கப்படுவது கிணறு ஆகும். நம் நாட்டில் செம்மண், சரளை மண், உவர்மண், வண்டல் மண், பாலை மண் என பலவகை மண்ணில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் நீர்த் தேவைக்காக பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி கிணறு எனப்பட்டது. இந்த கிணறானது அது தோண்டப்படும் இடத்தைப் பொறுத்து பலப் பெயரில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு. உரைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு. கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு. பூட்டை கிணறு – கமலை நீர்ப்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு, இதுபோல் கூவல் என்பது நீர்த்தேவைக்காக உவர்மண் நிலத்திலிருந்து தோண்டி அமைக்கப்படும் ஓர் நீர்நிலை ஆகும். |
|