| 1. |
Deer essay Tamil 5 lines |
|
Answer» மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடீ (CERVIDAE) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.[1] |
|