| 1. |
சாதனைப் பூக்கள் என்று எவற்றை இளந்திரையன் சுட்டுகிறார்? சிறுவினாக்கள்நிற்க நேரமில்லை |
|
Answer» விடை: செடியின் குறிக்கோள், நல்ல பூவினைத் தோற்றுவித்தல். அப்பூவினை வெளிப்படுத்தும் வரை அச்செடி இளைப்பாறுவதில்லை; வேதனையினை எண்ணி வருந்தி, குறிக்கோளை விட்டு விலகுவதில்லை; அது போல, குறிக்கோளினை நெருங்கும்வரை, இடையில் எதிர்கொள்ளும் இடையூறுகளையோ, தடைகளையோ கண்டு தயக்கம் காட்டக் கூடாது; இளைப்பாற எண்ணி நேரத்தை வீணாக்காது. தொய்வின்றித் தொடர்ந்து முயன்றால் சாதனைப் பூக்களை அடைய முடியும் என்கிறார், சாலை இளந்திரையன். விளக்கம்: இவ்வாறு 'பூத்தது மானுடம்' என்னும் கவிதைத் தொகுப்பில், ‘நிற்க நேரமில்லை’ என்ற பாடல் மூலம் இளந்திரையன் ஒருவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை விளக்குகிறார். ஆசிரியர் சாலையாரின் படைப்புக்களான 'புரட்சி முழக்கம்', 'உரை வீச்சு' ஆகிய நூல்கள் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசுகள் பெற்றுள்ளன. |
|