Saved Bookmarks
| 1. |
அரு_டும் (ளொ/ லொ) அ_பொடும் ( ண் / ன் ) வா_ப் (ரா/ றா) பொரு_க்கம் ( லா /ளா)உரிய சொல் தேர்த்தெழுதுக / Choose the correct word திருக்குறள் |
|
Answer» விடை: அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் விளக்கம்: " அருளொடும் அன்பொடும்" என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல் - குறள் 755 அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும். பிறர் மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக. பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராத போது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும் என்று உரையாசிரிய பெருந்தகைகள் கூறுகின்றனர். |
|