Saved Bookmarks
| 1. |
அறனீனும் இன்பமும் ஈனும் _________ தீதின்றி வந்த பொருள்.கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks திருக்குறள் |
|
Answer» விடை: அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். விளக்கம்: " அறனீனும் இன்பமும் ஈனும் " என்னும் தொடர், கீழ்க்கண்ட குறளில் கையாளப்பட்டுள்ளது. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் - குறள் 754 சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும். நேரிய வழி அறிந்து, தீமை ஏதும் செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட பணம் அறம் மற்றும் இன்பத்தையும் தரும். தீய வழியின் மூலம் திரட்டப்படாத செல்வம் தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும். |
|